ரஜினி பேரை சொல்லியும் அச்சச்சோ, லாரன்ஸா தெறித்து ஓடிய நடிகைகள், ஏன் சாமி?

by Thayalan

advertisement

ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு நடிக்க, பி.வாசு இயக்கிய சூப்பர் ஹிட் படம்மன்னன்.’ அந்த படம் சூப்பர் சார், அது போல ஒரு படம் உங்களோட பண்ணனும்ன்னு’ சிவலிங்கா சமயத்தில் பி.வாசுவிடம் லாரன்ஸ் சொல்ல,” அவர் அந்த படமே பண்ணிட்டா போச்சு” என்று சொல்ல, அப்படி கிளிக் ஆனது மன்னன் ரீமேக்.

உடனே வேலைகளை ஆரம்பித்தார் வாசு. மன்னன் படம் தயாரித்த சிவாஜி ப்ரொடக்சனிடம் கேட்க, அவர்கள் விக்ரம் பிரபுவுக்கு பண்ணலாம்ன்னு நினைக்கிறோம்ன்னு சொல்லி இருக்கிறார்கள். அப்புறம் என்ன நினைத்தார்களோ, ஓகே சொல்லி விட்டனர்.

அடுத்து தான் வந்தது இக்கட்டு. விஜயசாந்தி போல அவ்வளவு போர்ஷா நடிக்கிற ஹீரோயின்னா… நயன் ஓகேன்னு அவர்கிட்ட கேட்க, அவர் நோ சொல்லிவிட்டார். அப்புறம் அனுஷ்கா, படமே கையில் இல்லேன்னாலும் அவரும் நோ. தமன்னா நோ.

என்னதான் ரீசன்னு பார்த்தால்… அவர்கள் லாரன்சுடன் நடிக்கவிரும்பவில்லையாம்.

இந்த மூணு பேரு தான் அந்த ரோலுக்கு செட் ஆவாங்கன்னு வாசு படாத பாடு பட்டு கமிட் பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கிறார்.

advertisement
Popular Posts