இந்தி நடிகர் சஞ்சய் தத் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

by Thayalan

advertisement

கடந்த 2002-ம் ஆண்டு ஜான் கி பாஸி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சஞ்சய் தத்துக்கு ரூ. 50 லட்சம் முன்பணமாக தயாரிப்பாளர் ஷகில் கொடுத்திருந்தார். சில காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்து சஞ்சய் தத் திடீரென விலகி விட்டார். கொடுத்த முன் பணத்தை கேட்ட போது பணத்தை திருப்பி முடியாது. தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் ஷகில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சஞ்சய் தத் ரூ. 2 கோடி தர வேண்டும் என உத்தரவிட்டது. அதனை சஞ்சய் தத் ஏற்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம் சஞ்சய் தத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இரண்டு முறை உத்தரவிட்டது. ஆனால் இரண்டு முறை அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் சஞ்சய் தத் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி ரூ. 10 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றார். இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

advertisement
Popular Posts