சரவணா ஸ்டோர் உரிமையாளர் வயது தெரியுமா? இவர் ஒரு தாத்தா

Report
7462Shares

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாடார். இவரது மகன்கள் யோக ரத்தினம், ராஜ ரத்தினம், செல்வ ரத்தினம். செல்வரத்தினம் தொழில் தேடி சென்னை வந்துள்ளார். சைக்கிளில் சென்று சுக்கு காப்பி விற்று சிறிய வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.

பின்னர் வியாபாரம் சூடு பிடிக்க தனது சகோதரர்களை சென்னை அழைத்து வந்துள்ளார். தற்போது தொழிலில் இந்த 3 சகோதரர்களின் பிள்ளைகள் கொடி கட்டி பறந்து வருகின்றனர். யோகரத்தினம் மற்றும் ராஜ ரத்தினம் ஆகியோரின் வாரிசுகள் இணைந்து தொழில் செய்து வருகின்றனர்.

ஆனால் செல்வ ரத்தினத்தின் மகன் சரவணா அருள், தனது மைத்துனருடன் சேர்ந்து சரவணா செல்வரத்தினம் என்ற பெயரில் பல தொழில்களை செய்து வருகிறார். விளம்பரத்தில் நேரடியாக களமிறங்கி கலக்கியவர்.

இவருக்கு எதிராக நிறவெறி தாக்குதல்கள் நடந்தபோதும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் இவர், நயன்தாராவுடன் நடிப்பேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரை பார்ப்பதற்கு 30 வயது போல் தோன்றினாலும் இவரது உண்மையான வயது அதுவல்ல. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண்கள் இருக்கின்றனர்.

அதில் ஒரு பெண்ணுக்கு திருமணமும் ஆகிவிட்டது. அதாவது இவர் கிட்டத்தட்ட தாத்தா ஆகிவிட்டார். ஆனாலும் அவரின் தன்னம்பிக்கை மற்றும் சாதனைகளை பாராட்டியே ஆக வேண்டும்.

244992 total views