சூப்பர்ஸ்டாருக்கு எதிர் தனுஷிற்கு ஆதரவு : சமுத்திரக்கனியின் அதிரடி டுவிட்

by Vino

advertisement

புதிய அவதாரம் எடுத்த இயக்குனர் தனுஷிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட அனைத்து பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள்.

இந்த நிலையில் பவர் பண்டி படத்தில் படத்தில் உள்ள காட்சிகள் சிறப்பானது என்றும், அவர் மிகவும் திறமையானவர், இவ்வாறே எதிர்காலத்தில் வரும் படங்களில் அவரை இயக்குனராக பார்க்க விரும்புவதாக சமுத்திரக்கனி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தானது, சூப்பர்ஸ்டார் கருத்துக்கு எதிராகவே உள்ளது, அதாவது ஒரு படம் இயக்கினாலும் அது சரித்திரத்தில் இடம் பெற்ற படம் என்று வரலாறு உங்களை பற்றி பேசும். அதனால் அடுத்தடுத்து படம் இயக்கி அந்த படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி ரஜினிகாந்துக்கு எதிரான கருத்தை பதிவு செய்துள்ளமையானது தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகின்றது.

advertisement
Popular Posts