1000 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது மஹாபாரதம் – ஹீரோ யாருன்னு தெரியுமா?

Report
764Shares

இந்திய சினிமா தற்போது தான் மெல்ல உலக அளவில் ரீச் ஆகிவருகின்றது. தங்கல், சுல்தான், பாகுபலி ஆகிய படங்கள் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வர்த்தகத்தை பெரிதாக்கியுள்ளது.

இந்நிலையில் துபாயை சார்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ 1000 கோடி தயாரிப்பில் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

மஹாபாரதத்தை படமாக இயக்கவுள்ளார்களாம், இதில் பீஷ்மர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என கூறப்படுகின்றது.

மேலும், இந்தியாவில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இப்படம் 2020-ம் ஆண்டு திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். இவை 5 மொழிகளில் தயாராகவுள்ளதாகவும் கூறுகின்றனர்.

31023 total views