விஜய்யின் மாமாவும் இவரே! அண்ணனும் இவரே!

Report
557Shares

இளையதளபதி விஜய் குறித்து அவருடன் பல படங்களில் நடித்த குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய் சிறு பையனாக இருந்தபோதே தனக்கு தெரியும் என்றும் சிறுவயதில் அங்கிள் என்று அன்போடு அழைத்த விஜய் தற்போது 'அண்ணா' என்று அழைப்பதாகவும் கூறினார்.

மேலும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுப்பவர் விஜய் என்றும், சிறியவர் பெரியவர் என்ற பேதம் இல்லாமல் அனைவரையும் ஒருமையில் அழைக்காமல் மரியாதை தருபவர் விஜய் என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் விஜய் அதிகம் பேசாததற்கு காரணம், கொஞ்சம் பேசினால் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ளும் ஒருசிலரை தவிர்ப்பதற்காகவே என்றும் எம்.எஸ்.பாஸ்கர் கூறினார். ஆனால் அதே நேரத்தில் அவர் பேசுவது குறைவாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது கேரக்டரை நேர்த்தியாக செய்யும் வழக்கத்தை உடையவர் என்றும் அவர் மேலும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

19108 total views