ரசிகர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு விஜய் பதில்!

by Raana

advertisement

இளையதளபதி விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் மீது சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் என பலரும் நல்லெண்ணம் கொண்டுள்ளதால் விஜய்யும் பார்த்து பார்த்து கதையை தேர்வு செய்வதுண்டு.

இந்நிலையில் சமீபத்தில் பெண் பத்திரிக்கையாளரான தன்யா, விஜய் நடித்த சுறா படத்தை இடைவேளை வரை பார்த்தேன். பின்னர் வெளியே வந்துவிட்டேன். மேலும் ஜப் ஹாரி மெட் சேஜல் படத்தை இடைவேளை வரைக்கும் கூட பார்க்கமுடியவில்லை என அவர் ட்வீட் போட்டிருந்தார்.

இதனால் பலர் அவரை சமூக வலைதளங்களில் ஆபாசமாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தன்யா சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலிசில் புகார் அளித்துள்ளார்.

தற்போது விஜய் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பெண்களை மதிப்பவன் நான். யாருடைய படங்களையும் யாரும் விமர்சனம் செய்ய சுதந்திரமுண்டு.

பெண்களை இழிவாகவோ, மனதை புண்படுத்தும் நோக்கிலோ கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

advertisement
Popular Posts