அத்துமீறும் பிக் பாஸ் டாஸ்க்: ஆர்த்திக்கு ஏற்பட்ட மாரடைப்பு

Report
1049Shares

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இதனை ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று புதிதாக ஒரு டாஸ்க் கொடுக்க பட்டது அதில் இருவரை ஒரு வட்டமான கயிற்றால் இணைத்து அதிக பந்துகளை பொறுக்குவதாகும்.

அதில் யார் அதிக பந்துகளை எடுத்துக்கொண்டு கூடைகளில் சேகரிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அந்த வகையில் ஒரு பக்கம் பிந்து மற்றும் ஜுலி சுற்றப்பட்டுள்ளனர். மற்றொரு பக்கம் சுஜாவும், ஆர்த்தியும் கயிற்றால் சுற்றப்பட்டுள்ளனர்.

முதலில் ஆர்த்தி வேகமாக சுஜாவை இழுத்தாலும், சிறிது நேரத்தில் அவர் சோர்வானதால் சுஜா அவரை வேகமாக இழுக்கிறார். இதனால் வலி தாங்க முடியாமல் ஆர்த்தி கதறுகிறார்.

ஆனால் சுஜா அதனை பொருட்படுத்தாமல் இழுத்ததால் ஆர்த்திக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் பிக் பாஸ் வீட்டில் பெரிய பரபரப்பு காணப்படுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது.

38920 total views