சிம்புவிற்கு குவியும் படவாய்ப்பு.!

Report
182Shares

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை அடிக்கடி சந்திப்பவர் என்று பட்டியல் எடுத்தால் அதில் முதலில் நடிகர் சிம்புவின் பெயர் தான் வரும். கடைசியாக AAA பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்துவருகிறார். பல அக்ரீமெண்ட்களில் கையெழுத்திட்டு நடித்துக்கொண்டிருக்கும் அவர் ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார். அந்த படத்தின் படம்பிடிக்கும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது.

அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனி ஒருவன், வேலைக்காரன் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் பிரபல இயக்குனர் சரணுடன் ஒரு படம் வேலை செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவர் அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கியவர் ஆகும். சமீபத்தில் இந்த இயக்குனர், சிம்புவுக்கு கதை கூறியுள்ளதாகவும், தற்போது இந்த படம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7071 total views