'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்: பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ்

by Pious

advertisement

தமிழில் உருவாகவுள்ள 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கை பாலா இயக்கவுள்ளார். விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக்/ டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கும் இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதன் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன் ரீமேக்கை இயக்கவிருப்பது யார் என்று பல்வேறு இயக்குநர்களின் பெயர் செய்திகளில் அடிபட்டது. தற்போது இயக்குநரின் பெயரை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பாலா இயக்கத்தில் தமிழில் 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக் உருவாகவுள்ளது.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்கு படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று கிடைத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது.

advertisement
Popular Posts