பெயரை மாற்றிய நடிகை சமந்தா!

by Dias

advertisement

தமிழ் பெண்ணான நடிகை சமந்தா ஆந்திர நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட தன் பின்னர் தனது பெயரையும் மாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் பல்லாவரத்தில் பிறந்தவர் நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதான்யாவுக்கும் அண்மையில் திருமணம் முடிந்தது. நடிகர் நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யாவின் குடும்பத்திற்கு அக்னிநேனி என்ற குடும்பப் பெயர் உள்ளது.

சமந்தா சைதன்யாவில் கைப்பிடித்த கையோடு அக்னிநேனி குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். இதனால், அக்னிநேனி குடும்பத்துக்கு நன்றி கூறும் விதமாக தன் பெயரை மாற்றியுள்ளார்.

தனது டுவிட்டரில் தன் புதிய பெயர் பற்றி பதிவிட்டுள்ள சமந்தா, இனிமேல் தன்னுடைய பெயர் சமந்தா ருத் பிரபு அல்ல. சமந்தா அக்னினேனி என்று குறிப்பிட்டுள்ளார்.

advertisement
Popular Posts