மெர்சல் செய்த பெரும் சாதனை!

Report
211Shares

விஜய்யின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோடும் ‘மெர்சல்’ திரைப்படம் 225 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம், பல நட்சத்திர நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோஹினி திரையரங்கில் மொத்த டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டதாக அந்த திரையரங்கத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

‘மெர்சல்’ திரைப்படத்தின் ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள அதேநேரம், இந்த திரைப்படம் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என ரசிகர்கள் தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

9177 total views