விஷாலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..! இப்படியா நடந்தது மலேசியாவில்..?

Report
423Shares

2005-ல் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் சண்டக்கோழி. விஷால் நாயகனாக நடித்த இந்த படத்தில் ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், கஞ்சா கருப்பு முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விஷாலுக்கு முதல் மெகா ஹிட் படமாக அமைந்தது. இந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து, சண்டக்கோழியை விடவும் இந்த இரண்டாம் பாகம் இன்னும் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த படத்தின் ட்ரைலரை மலேசியாவில் நடக்கும் நட்சத்திர விழாவில் வெளியிட்டுள்ளார்கள். மலேசியாவில் வெளியிட்ட அந்த ட்ரைலர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அங்குள்ள சிலர் இந்த ட்ரைலரை வீடியோ எடுத்து யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார்கள்.

மேலும், காட்சிகள் சரியாக தெரியவில்லை என்றாலும் இசை மற்றும் வசனமும் தெளிவாக கேட்கிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளார்கள். மிக விரைவில் இப்படத்தின் ட்ரைலர் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

12803 total views