சரியாக படப்பிடிப்பிற்கு தமன்னா செல்லாததற்கு இது தான் காரணமாம்

Report
136Shares

கோலிவுட் சினிமாவில் தமன்னாவின் இறுதிப்படம் விக்ரமுடன் நடித்த ஸ்கெட்ச் என்ற படம் தான். இந்த படம் ரிலீஸ் ஆக தயாராகியுள்ள நிலையில் தமன்னாவிற்கு வேறு எந்த படமும் தமிழில் தற்போது இல்லை.

ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்த குயின் படம் மிக பெரிய ஹிட் அடித்து பல விருதுகளை பெற்றது. அந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீ மேக் செய்கிறார்கள்.

இந்த படத்தின் தெலுங்கு மொழியில் தமன்னா கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் காஜல் அகர்வாலும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள்.

மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் நீலகண்டன் இயக்குகிறார். ஹிந்தி கதையிலிருந்து சில மாற்றங்களை தெலுங்கு படத்தில் இயக்குனர் செய்திருக்கிறார்.

அதனால் இயக்குனருக்கும் தமன்னாவிற்கும் எதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சரியாக படப்பிடிப்பிற்கு தமன்னா செல்லாமல் இருக்கிறாராம். அதனால் மலையாளத்தில் மஞ்சிமா மோகனை வைத்து இயக்குனர் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.

6126 total views