மகளுக்காக டயர் ஒட்டிய நடிகர் அஜித்: வைரலாகும் வீடியோ!

Report
1021Shares

நடிகர் அஜித், இயக்குனர் சிவாவின் கூட்டணியில் விரைவில் உருவாகவிருக்கும் படம் விஸ்வாசம். இவர்களது கூட்டணியில் உருவான `வீரம்', `வேதாளம்', `விவேகம்' போன்ற 3 படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து இந்த கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு செண்டிமெண்டாக, விஸ்வாசம் என படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பானது துவங்கவுள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.

மிகப்பெரிய பைக் ரேசர் என அனைவராலும் புகழப்பட்ட நடிகர் அஜித், தன்னுடைய மகளுக்காக டயர் ஓட்ட சிரமப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றார்.

மேலும், அங்கு அஜித் சாதாரண ஒரு மனிதரைப்போல எந்தஒரு பந்தாவும் இல்லாமல் இருந்தது, அனைவரது மத்தியிலும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

41854 total views