நடித்தால் நயன்தாரவுடன் தான் நடிப்பேன் : அடித்து கூறும் சரவணா ஸ்டோர் உரிமையாளர்

Report
279Shares

என்னுடைய கம்பனி நானே தான் நடிப்பேன் என அனைத்து விளம்பரத்திலும் நடித்து வருபவர் தான் சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன்.

இவர் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் நடித்த விளம்பரம் பலரிடம் இருந்தும் பல்வேறு விமர்சங்களை பெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது சினிமாவிலே நடிக்க வேண்டும் என்ற கனவுக் கோட்டை கட்டி வருகின்றார் சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன்.

இது பொய்யான தகவல் என்று ரசிகர்கள் நினைத்துக்கொண்டு இருக்க திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த சரவணன் நான் திரையுலகில் முதல்படமாக நயன்தாராவுடன் நடித்து கால்பதிப்பேன் என உறுதியாக கூறி இருக்கின்றார்.

எவ்வாறு இருந்தாலும் இதற்கு நயன்தாரா ஓகே சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

10029 total views