வருத்தத்தில் ஒல்லி நடிகர்

by Thayalan

advertisement

படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால், வருத்தத்தில் இருக்கிறாராம் ஒல்லி நடிகர்.

மச்சினிச்சி இயக்கத்தில் ஒல்லி நடிகர் நடித்துள்ள இன்ஜினீயரிங் படத்தின் இரண்டாம் பாகம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, அங்கும் நல்ல வெற்றி பெற்றது. இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடித்திருப்பதால், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தனர்.

ஒல்லி நடிகரின் பிறந்த நாளான கடந்த மாதம் 28ம் தேதி தான் படம் ரிலீஸாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஹிந்தி வெர்ஷன் சென்சார் ஆகத் தாமதம் ஆனதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அப்படி ரிலீஸைத் தள்ளிவைத்தும், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, வருகிற வெள்ளிக்கிழமை தமிழில் ரிலீஸாகிறது இந்தப் படம். ஆனால், அதே விடுமுறையைக் குறிவைத்து தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் படங்கள் ரிலீஸாகும் அல்லவா? தெலுங்கில் மூன்று படங்கள் வெளியாவதால், இந்தப் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதே நிலைதான் ஹிந்தியிலும். அக்‌ஷய் குமார் நடித்த படம் ரிலீஸாவதால், வேறெந்த படத்துக்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

எனவே, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரு வாரம் கழித்து ரிலீஸாகிறது இந்தப் படம். இதற்கு பிறந்த நாளின்போதே ரிலீஸ் செய்திருக்கலாமே… ரிலீஸைத் தள்ளி வைத்தது வீணாப் போச்சே என்று புலம்பி வருகிறாராம் ஒல்லி நடிகர்.

advertisement
Popular Posts