ஓவியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்… மீண்டும் வருகிறாரா?

by Thayalan

advertisement

தமிழகம் முழுக்க தற்போது அனைவராலும் ஓவியாவின் புகழ்தான் பாடப்படுகிறது. அந்த அளவுக்கு ஓவியா தனது நடிப்பு மற்றும் துடுக்குதனத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.

ஆரவ் மீதான காதல் தோல்வியால் மனமுடைந்து பிக்பாஸ் வீட்டை விட்டு சுயமாகவே வெளியேறினார். அவருக்கு பல முறை மருத்துவ கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.

இது போதுமானதாக இல்லை என்பதால் மீண்டும் கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்னும் ஆரவ் மீதான காதல் நினைவில் இருந்து வெளியே வரவில்லை. அவர் தற்போது கேரளாவில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை கேரளாவில் உள்ள அவரது வீட்டிற்கே நேரில் சென்ற கமல் ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்தும் பேசப்பட்டதாகவும், அவர் மீண்டும் இந்நிகழ்ச்சிக்குள் வருவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

advertisement
Popular Posts