பாகுபலியின் சாதனையை முறியடிக்க இப்படியும் ஒரு திரைப்படம்! இத்தனை தியேட்டர்களா

Report
302Shares

பாகுபலி திரைப்படம் தான் இதுவரை அதிகமான திரையரங்குகளில் வெளியான படம் என்று சாதனையை செய்திருந்தது. மேலும் வசூலிலும் இது வெளுத்து வாங்கியது.

ராஜமௌலி இயக்கத்தில் வரலாற்றுக்கதையை மையப்படுத்திய இப்படம் உலகம் முழுக்க 7500 திரையரங்குகளில் வெளியானது. தற்போது இதை முந்திசெல்ல தயாராகிவிட்டது பத்மாவதி திரைப்படம்.

பாலிவுட் முக்கிய இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி, ராஜபுத்திர வம்ச வாழ்கையை பிரம்மாண்ட படமாக இயக்கியுள்ளார். இதில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்க, அவரை கவர்ந்து செல்லும் தில்லி சுல்தான் ரன்வீர் சிங்கும் நடித்திருக்கிறார்.

இப்படம் பல இந்திய மொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளதோடு இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் அக்டோபர் மாதம் கடைசியில் வெளியாக உள்ளதாம்.

8163 total views