பாகுபலி-2 தமிழகத்தில் 28 அன்று வெளியாகுமா? வெளியான தகவல்

by Vino

advertisement

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ள உலகளவில் 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய பாகுபலி படத்தின் அடுத்த பாகம் பாகுபலி - 2 தமிழகத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும் இந்த தடைகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டு, ஏப்ரல் 28 அன்று எவ்வித தடையுமில்லாமல் பாகுபலி-2 தமிழகத்தில் வெளியாகிறது.

ஏசிஇ நிறுவனமானது ரூ 1.18 கோடி கடன் கொடுத்தமை தொடர்பில் குறித்த தடை உத்தரவை பிறப்பிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும் குறித்த கடனுடன் சேர்த்து ரூ 10 லட்சம் அதிகமாக ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் ஏசிஇ நிறுவனத்திற்கு செலுத்தியிருந்தது. இதன் காரணமாக இவ்வழக்கை முடித்துவைத்தது உயர் நீதிமன்றம்.

அடுத்த 28 ஆம் தேதி பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற பெரிய கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்.

advertisement
Popular Posts