பிரபல டிவியை கதற வைத்த விஜய் ரசிகர்கள்

Report
153Shares

இளையதளபதி விஜய் நேற்று அரியலூர் அனிதாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியதை எந்தவித பேதமும் இன்றி பலர் பாராட்டு தெரிவித்தனர். விஜய்யை பிடிக்காதவர்கள் கூட விஜய்யின் இந்த மனித நேயத்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

ஆனால் என்ன செய்தாலும் குறையை கண்டுபிடிக்கும் ஒருசிலர் விஜய்யை குற்றம் கூறி வந்தனர். அவர் விளம்பரத்திற்காக இதுபோன்ற செய்கையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தினர்

இந்த நிலையில் பிரபல டிவியின் டுவிட்டரில் விஜய்யால் ஒரு மாணவி படிப்பை இழந்து தற்போது ஆடு மேய்த்து கொண்டிருப்பதாக டுவீட் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மாணவியின் பெயரை கூறுங்கள், நாங்களே அந்த பெண்ணின் படிப்பு செலவை ஏற்கிறோம் என்று ஆக்கபூர்வமாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

விஜய் ரசிகர்களால் ஏற்பட்ட பயங்கர எதிர்ப்பு காரணமாக பிரபல டிவி அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டது. இதிலிருந்து நீதிவென்றதாக விஜய் ரசிகர்கள் பெருமைப்பட்டு கொண்டனர்.

4405 total views